சர்ச்சைக்குள்ளாகி சரிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியில் பயிற்சியாளருக்கான இடம் வெற்றிடமாக காணப்படுகின்றது. அந்த இடத்திற்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் பிறைன் லாரா தெரிவு செய்யப்படவிருக்கிறார்.
கிரிக்கட் உலகின் பல சாதனைகளுக்கு செந்தக்காரர் லாரா. இவர் சர்வதேச கிரிக்கட் இருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றிருந்தார்.தற்போது மேற்கிந்தி தீவுகள் அணியின் பயிற்றுவிப்பாளராக முடிவெடுத்துள்ளார். அவர் பயிற்றுவிப்பாளராக இருந்த பிறந்திய அணியான டிரினிடாட் அண்டு பாய்கோ அணியுடன், இது தெடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
தற்போது பலமிழந்த நிலையில் இருக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணி, சமீபத்தில் பங்களாதேஷூடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிள் படுதோல்வியடைந்தது. இதையடுத்து அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த ஜோன் டைசன் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அணியின் பயிற்றுவிப்பாளராக லாரா நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. அடுத்த மாதம் இடம் பெறவுள்ள சாம்பியன் கிண்ணப் போட்டியிலிருந்து லாரா பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து லாரா கூறியதாவது.
“இது தொடர்பாக நான் கிரிக்கட் சபையுடன் பேசியிருக்கிறேன். சபை நிர்வாகிகள் என்னிடம் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னை அவர்கள் பெரிய சொத்தாக நினைத்தால் அவர்களின் கோரிக்கையை நான் ஏற்பேன் ” என்றார்.
கெழும்பு பெரிய பள்ளியில் ரமழான் பிறை பார்ப்பதற்கான மாநாடு நாளை மாலை இடம்பெறவுள்ளது. இலங்கை வாழ் முஸலிம்கள் நாளை மாலை நாட்டின் எந்த பாகத்திலும் பிறை தென்பட்டால், தகுந்த ஆதாரத்துடன் அறிவிக்குமாறு ஜம்மியத்துல் உலமா சபை கூறியுள்ளது.
ஐம்பெருங் கடமைகளுள் நான்காவது நோன்பாகும். ஹிஜ்ரி ஆயிரத்து நானூற்று முப்பதாம் வருடத்தில் நோன்பு நோற்பதற்காக உலக வாழ் இஸ்லாமியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நடப்பு மாதமான ஷஃபான் மாதத்தி இருதி பகுதியில் உள்ள முஸ்லிம்கள் கிழக்கு அடி எானத்தை நோக்கி பார்த்தவாறு ரமழான் மாத தலை பிறைக்காய் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனா்.
This is an example of a WordPress page, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many pages like this one or sub-pages as you like and manage all of your content inside of ... Continue reading →